இந்தியா

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் சுஷ்மா சுவராஜ்

rajakannan

வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்கள் பலரை மீட்டு தாயகம் கொண்டு வந்தவர் என்ற பெருமை சுஷ்மா சுவராஜுக்கு உண்டு.

பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்தவர். 

சுஷ்மாவின் செயல்பாடுகளில் சில:

ஈரானில் மாட்டிக் கொண்டிருந்த 168 இந்தியர்களை மீட்க பெரும்பணியை செய்தவர்

விதிகளை தளர்த்தி பாகிஸ்தான் சிறுமிக்கு ஓராண்டு விசா கொடுத்து இதய அறுவ சிகிச்சை மேற்கொள்ள வழி ஏற்படுத்தினார்

காது கேளாத, வாய் பேசாத இந்திய பெண் கீதாவை பாகிஸ்தானில் இருந்து மீட்டவர். பஜ்ரங்கி பைஜான் படத்தில் வரும் காட்சி இதனை கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை அரசோடு பேசி , சட்ட வழிகள் மூலம் மீட்டவர்