இந்தியா

சுஷாந்த் சிங் வழக்கில் 'பகீர்' கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!

JustinDurai
சுஷாந்த் சிங் வழக்கில் சி.பி.ஐ.யின் விறுவிறுப்பான விசாரணைக்கு மத்தியில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான கூற்று ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்றும் சுஷாந்த் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் சுப்பிரமணியன் சுவாமி சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்நிலையில் சுஷாந்த் சிங் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று பரபரப்பான கூற்று ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், சுஷாந்த் சிங் ராஜ்புத் துபாயுடன் தொடர்புடைய போதைப்பொருள் வியாபாரியை சந்தித்தார் என்று  சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 
 
“சுஷாந்த் கொலை செய்யப்பட்ட நாளில் துபாய் போதைப்பொருள் வியாபாரி அயாஷ் கான், சுஷாந்தை சந்தித்துள்ளார். அது ஏன்? ” என்று சுவாமி ஒரு ட்வீட்டில் கேட்டுள்ளார். 
 
மூத்த அரசியல்வாதியான சுவாமி ட்வீட்டில், “சுனந்தா புஷ்கர் உடல் எய்ம்ஸ் டாக்டர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது வயிற்றில் என்ன இருந்தது என்ற உண்மைநிலை வெளியானது. ஆனால் இது ஸ்ரீதேவி மற்றும் சுஷாந்திற்கு நிகழவில்லை.”
விசாரணையில், "ரியா சக்ரவர்த்தி மகேஷ் பட்டுடனான அவரது உரையாடலுக்கு முரணான ஆதாரங்களைத் தொடர்ந்து அளித்தால், சிபிஐ அவரை கைதுசெய்து உண்மையை அறிய காவலில் விசாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை." எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சிபிஐ சுஷாந்தின் ரூம்மேட் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ் சிங் மற்றும் ஹவுஸ்ஹெல்ப் தீபேஷ் சாவந்த் ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.