இந்தியா

சுஷாந்த் தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி !

சுஷாந்த் தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி !

jagadeesh

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எம்.எஸ். தோனி படம் மூலமாக பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைச் சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை
ஏற்படுத்தியது. இவரது தற்கொலைக்கு இந்தி சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்து சிலர் படவாய்ப்புகளை
தட்டிப்பறித்ததுமே காரணமாகக் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு
மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்தார். பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் என சுஷாந்தின் மரணம் ஒரு மர்மமாகவே தொடரும் நிலையில் இந்த வழக்கை உடனடியாக தீவிரமாக விசாரிக்க வேண்டுமென சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரணை செய்ய வேண்டும் என்று பீகார் அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். சுஷாந்த் மரணம் தொடர்பான வழ்ககை சிபிஐ விசாரணகை்கு உத்தரவிட மத்திய அரசிடம் நேற்று பீகார் மாநில அரசு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.