இந்தியா

கேரளா: நூலிழையில் உயர் தப்பிய மனிதர்- வைரல் வீடியோ

கேரளா: நூலிழையில் உயர் தப்பிய மனிதர்- வைரல் வீடியோ

webteam

கேரளாவில் வாகன விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பிரதான சாலையில் சாமனியன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வழக்கம்போல சாலையில் வாகனங்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென அவரின் இடது பக்கமாக வேகமாக வந்த வாகனமானது நூலிழையில் அவர் மீது மோதமால் சென்றது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், சிறிது நேரம் என்ன செய்வது எனத் தெரியாமல் நிலைகுலைந்து நின்றார். அதன் பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகிலிருந்த சிசிடிவி கேமாரவில் பதிவாகியிருந்தது. இதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்விட்டர் வாசி ஒருவர் “ இந்த மாதத்திற்கான சிறந்த அதிர்ஷ்டசாலி விருதை இவருக்கு வழங்கலாம்” என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.