இந்தியா

நிபந்தனைகளுடன் சுருக்கு மடி வலை பயன்படுத்த மீனவர்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

webteam

மீனவர்கள் சுருக்கு மடி வலையை உபயோகப்படுத்துவதால், அதில், பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்கிறது. 'சுருக்கு மடி வலை' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், 'சுருக்கு மடி வலை'யை கொண்டு மீன் பிடிக்கலாம் என கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறி, 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 'சுருக்கு மடி வலை'யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு
சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவு செய்து தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.மேலும், பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எவரும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மீனவர்கள் நலன் கருதி மீன்பிடி தொழிலை முறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்


இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஞானசேகரம் என்பவர் தனி மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்கு மடிப்பு வலைக்கு தடை விதித்துள்ளதது என்பது சட்ட விரோதம். குறிப்பாக கடலில் 12 நாட்டிக்கள் மைல்கள் தாண்டி மீன் பிடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு சென்று மீன் பிடித்தாலும் அவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகவும், வலைகளை பறிமுதல் செய்யவதாகவும், அபராதங்கள் விதிப்பதாகவும் இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் சுருக்கு மடிப்பு வலைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது தமிழக அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது அதில் பதில் அளித்த தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பேணிக்காக்கவும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளர்களை பாதுகாக்கவும், மாநில அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தான் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை என்றும் கூறியிருந்தது

சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் சார்பில் 12 நாட்டிக்கல் மயிலுக்கு அப்பாற்பட்ட பகுதிகளாவது சுருக்குமுடிவலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 12 நாட்டிக்கல் மயிலுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சுருக்கும்படிவலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க மீனவர்கள் அந்த வலைகளை எடுத்து செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வாரத்திற்கு திங்கள் வியாழன் ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே சுருக்குமடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டும் என்றும் அதுவும் காலை எட்டு மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும் என்றும் கட்டாயம் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே இந்த வலைகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த படகுகளிலும் ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பல கடுமையான நிபந்தனைகள் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

மேலே சொன்ன விதிமுறைகளை தவறும் மீனவர்கள் மீது தமிழக அரசு அதன் வரம்புக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் 12 நாட்டிக்கல் மயிலுக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுருக்கு முடிவளைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்த தமிழக அரசாணைக்குள் இப்போதைய நிலையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். இது தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான பிரதான வழக்கின் விசாரணை இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.