எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தானில் 55 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் துல்லிய தாக்குதலின் போது அங்கு 35 பயிற்சி முகாம்கள் இருந்ததும், தற்போது 20 முகாம்கள் புதிதாக தோன்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. 55 பயங்கரவாத முகாம்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதும் கவலை தரும் செய்தி என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில், எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சிகள் 60 முறை நடந்துள்ளன.