இந்தியா

இவர் தாங்க ட்ரைஃப்ரூட் பிள்ளையார் - சூரத் மருத்துவரின் வித்தியாச கலை முயற்சி

இவர் தாங்க ட்ரைஃப்ரூட் பிள்ளையார் - சூரத் மருத்துவரின் வித்தியாச கலை முயற்சி

webteam

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த மருத்துவர் அதிதி மிட்டல் உலர் பழங்கள், தானியங்களைப் பயன்படுத்தி அழகிய பிள்ளையார் உருவத்தைச் செய்துள்ளார். நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, ஃபைன் விதைகள் உள்ளிட்ட உலர்ந்த பழங்களுடன் காட்சியளிக்கும் இந்தப் பிள்ளையார் மக்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பிள்ளையார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சூரத் மருத்துவரின் சாப்பிடும் பிள்ளையார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத இந்தப் பிள்ளையார் சிலை 20 அங்குலம் உயரம் உடையது. மருத்துவர் அதிதி மிட்டல், அந்த உலர் பழங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை மருத்துவமனையில் வைத்திருக்கிறார். இந்த பிள்ளையாரில் உள்ள உலர் பழங்களும் தானியங்களும் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.