இந்தியா

“மருத்துவ படிப்புகள் வணிகமயமாகிவிட்டது” - உச்சநீதிமன்றம் வேதனை

rabiyas

நாட்டில் மருத்துவப்படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் பாடத்திட்டத்தை கடைசி நேரத்தில் மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாட்டில் மருத்துவப்படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டது என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும் “நவம்பரில் நடைபெற வேண்டிய தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் பாடத்திட்டத்தை மாற்றம் செய்கிறார்கள், மாணவர்கள் மனு தாக்கல் செய்தவுடன் ஜனவரி மாதம் தேர்வை ஒத்திவைக்கிறார்கள்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இவை எதுவும் நாட்டில் மருத்துவப் படிப்புக்கு நல்லதாக தெரியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வேதனையை பதிவு செய்தனர்.