இந்தியா

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு வெள்ளியன்று விசாரணை ?

webteam

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை வெள்ளியன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கோரிய முன் ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று ஏற்க மறுத்தது. அத்துடன் மேல் முறையீடு செய்ய மூன்று நாட்கள் அவகாசமும் வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிபிஐ அதிகாரி டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை என்பதால் அவர்கள் திரும்பினர். பின்னர் அமலாகத்துறையும் சிதம்பரம் வீடு சென்று திரும்பினர். அத்துடன் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் முகாமிட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து இன்று சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுவில் பிழைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிழைகள் திருத்தப்பட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிடப்பட்டது. ஆனால் சிதம்பரம் மனுவை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.