இந்தியா

முக்கிய 3 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

முக்கிய 3 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

webteam

முக்கிய 3 வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.  இதனால் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்த அயோத்தி வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாளை முக்கியமான மேலும் 3 வழக்குகளுக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கெனவே இதுதொடர்பாக விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பில் மறு ஆய்வு கோரும் மனுக்களின் மீதும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அறிவிக்கிறது. 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பின் மீது தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது நாளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இது தவிர  ‘செளக்கிதார் சோர் ஹை’ என அதாவது  ‘காவலாளியே திருடன்’ என தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.