இந்தியா

ராகேஷ் அஸ்தானா நியமனம் தொடர்பாக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நவ.24 தேதி விசாரணை

EllusamyKarthik

டெல்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு வரும் நவம்பர் 24ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவை கடந்த ஜூலை மாதம் டெல்லி காவல்துறை கமிஷனராக மத்திய அரசு நியமித்தது அவர் ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்ட போதும் ஓராண்டு பணி கால நீட்டிப்பு வழங்கி இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டது.

இது முற்றிலும் விதிமுறை மீறல் என்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளை மீறும் வகையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு. பிறப்பிக்கப்பட்டிருந்தது இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுக்கள் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது சரியான விதிமுறை அல்ல எனவே இதனை எஸ்எல்பி வழக்காக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து வழக்கினை மாற்றி தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு ஒப்புக் கொண்டதையடுத்து வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.