தன் பாலின திருமணம்
தன் பாலின திருமணம் முகநூல்
இந்தியா

தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !

PT WEB

தன் பாலின திருணமத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் மீது கடந்த ஏப்ரல் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணையானது நடைபெற்றது.

தன் பாலின திருமணம்

இதில் மத்திய அரசு தரப்பு வாதிடுகையில், “தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது தற்போதைய சூழலுக்கு உகந்தது அல்ல. மேலும், இதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. ஆந்திரா, ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்கள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தன் பாலின ஈர்ப்பு உள்ளவர்களின் உண்மையான மனிதாபிமான பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்” என்று கூறப்பட்டது.

தன் பாலின திருமணம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை கடந்த மே 11ம் தேதி ஒத்திவைத்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற வலைதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.