அம்பானியின் ‘வந்தாரா' விலங்குகள் மறுவாழ்வு மையத்தில், விலங்குகளைப் பெறுவதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் செயல்பட்டு வரும் `வந்தாரா’ அமைப்பு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து யானைகள் போன்ற விலங்குகளை வாங்கியதில் சட்ட விதிமுறைகளை மீறியதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த நிலையில், விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ``விலங்குகளை வாங்குவது ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டே நடந்துள்ளது” எனத் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பவேண்டாம்" என்றும் தெரிவித்தனர்