Supreme Court
Supreme Court  PT (file picture)
இந்தியா

‘விவாகரத்து பெற இனி 6 மாத காத்திருப்பு தேவையில்லை’ - உச்சநீதிமன்ற புதிய உத்தரவு யாருக்கு பொருந்தும்?

PT WEB, Niranjan Kumar

”அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், மீளவே முடியாத மணமுறிவு என்று சூழலில் இருக்கும் ஒரு தம்பதி, பரஸ்பரம் தங்களுக்குள் முடிவெடுத்து விவாகரத்து பெற விரும்பினால், அவர்களுக்கு சட்டவிதிகளின்படி வழக்கமாக அறிவுறுத்தப்படும் 6 மாத கால காத்திருப்பு தேவையில்லை. உச்சநீதிமன்றத்தால் அவர்களுக்கு விவாகரத்து வழங்க முடியும்” என ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நேற்று முன்தினம் (மே 1ஆம் தேதி) தீர்ப்பளித்திருக்கிறது.

இதுநாள்வரை இந்தியாவில்...

இரண்டு தரப்பினரும் விவாகரத்து வேண்டும் என்று பரஸ்பரமாக கேட்டாலும், நீதிமன்றம் சுலபமாக விவாகரத்து வழங்காது. அதில் முக்கியமாக அத்தம்பதிக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை மணமுறிவு கன்சல்டேஷன் கொடுக்கப்படும்.

divorce

விவாகரத்தில் முக்கியமான விஷயம் ஜீவனாம்சம் கொடுப்பதுதான் என்பதால், அதை யார் தருவதென நீதிமன்றம் முடிவுசெய்யும் (சம்பந்தப்பட்ட இணையரின் வருமானம் மற்றும் அவர்களது திருமண வாழ்க்கையின் தரம் உள்ளிட்டவை அடிப்படையில்).

போலவே விவாகரத்திற்கு பிறகு குழந்தைகள் யாரிடம் இருப்பது என்பது குறித்தும் (குழந்தையின் விருப்பம், பெற்றோரின் வருமானம் அடிப்படையில்) நீதிமன்றம் தான் முடிவெடுக்கும்.

விவாகரத்து வழக்குகள் மேல்முறையீட்டிருக்காகத்தான், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தையும் நேரடியாக உச்சநீதிமன்றத்தையும் நாட இயலும்.

இந்தியாவைப் பொறுத்தவரை உலகிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

இந்தியாவில் சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, ‘தாக்கல் செய்யப்படும் மொத்த வழக்குகளில்’ விவாகரத்து வழக்கு வெறும் 1.1% தான். அதாவது நூறு திருமணங்களில் ஒரு சதவிகித திருமணத்திற்கு குறைவாகத்தான் விவாகரத்தில் சென்று முடிகிறது என சொல்லப்படுகிறது. எனினும் சமீப நாட்களாக நகர்ப்புறங்களில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதென்றும் சில தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் படி மோசமான திருமண உறவுகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 37,000 பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தும் வருவதாக தெரிகிறது.

இப்படியான சூழலில்தான், உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, விவாகரத்துக்கு 6 மாத கால காத்திருப்பு இனி கட்டாயமில்லை. எனில், எந்தெந்த அடிப்படையில் விவாகரத்து பெற முடியும் என்பதை இங்கு காண்போம்:

பலதார மணம், வன்கொடுமை, மனநல பாதிப்பு, குணப்படுத்த முடியாத தொற்றுநோய், சரி செய்ய முடியாத மணமுறிவு, மதமாற்றம் உள்ளிட்ட பல காரணங்களுக்கான அடிப்படையில் விவாகரத்தினை பெற முடியும். விவாகரத்து கேட்கும் ஜோடிகள் கடைசியாக எந்த முகவரியில் ஒன்றாக இருந்தார்களோ அந்த மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்யலாம்

Supreme Court of India

விவாகரத்து பதிவு செய்வதற்கு முன்பாக கணவன், மனைவி இரண்டு பேரில் யாராவது ஒருவர் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்பது விதி.

இதுபற்றி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் பத்மநாபன் நமக்கு அளித்த பேட்டி: