இந்தியா

ஆதார் செல்லும் ! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆதார் செல்லும் ! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

webteam

ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட 31 மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நபர் அரசியல் சாசன அமர்வு 4 மாதங்களில் 38 நாட்கள் விசாரணை நடத்தி, கடந்த மே மாதம் 10-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. 

இந்நிலையில் ஆதார் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில்  “ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.போலியாக ஆதார் அட்டைகளை தயாரிக்க இயலாது. அது தனித்துவமானது,ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார்.கல்வியால் நம்முடைய கைரேகை கையெழுத்தானது. தொழில்நுட்பத்தால் நம்முடைய கையெழுத்து கைரேகையாக மாறியிருக்கிறது. எனவே ஆதார் செல்லும்” என்று அரசியல் சாசன அமர்வில் 5-ல் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது. மேலும் குழந்தைகளுக்கு ஆதாரம் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.