இந்தியா

கடன் தள்ளுபடி வரம்பில் மாநில அரசுக்கே அதிகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Sinekadhara

விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கடன் தள்ளுபடி செய்யும்போது அதை யாருக்கு செய்யவேண்டும் என்பதை வரையறுக்கவும், எந்த விவசாயியிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும், சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே என்றும் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.