இந்தியா

நீதிபதி கர்ணன் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

நீதிபதி கர்ணன் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

Rasus

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. அவரை உடனடியாக கைது செய்யவும் மேற்கு வங்க போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவரை கைது செய்யும் முயற்சியில் மேற்கு வங்க போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவானர். இதனால் போலீசாரால் நீதிபதி கர்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய முடியவில்லை. இதனிடையே, தன் மீதான தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும், நீதிபதி கர்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகக் கூறிய அவரது வழக்கறிஞரின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

இந்நிலையில் சிறைத் தண்டனையை ரத்து செய்ய கோரி கர்ணன் தரப்பில் 4-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்ததோடு சிறைத் தண்டனையும் உறுதி செய்தது.