இந்தியா

தினகரன் மீதான வழக்குக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

தினகரன் மீதான வழக்குக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

webteam

அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணைக்கு தடை கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.‌ அந்த மனு இன்று விசார‌ணைக்கு வந்தது. தினகரனின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினர்.