கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை உச்சநீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் விதிகளை மீறி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு உதவியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் 4வது முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது மகளை சேர்ப்பதற்காக அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்றால் வழக்கின் தன்மை மாறிவிடும் என்று சிபிஐ கூறியுள்ளது. வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரம் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களின் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. அவற்றை உச்சநீதிமன்றம் இன்று ஆராய்கிறது.