விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கில் விவசாயிகளின் தற்கொலை என்பது நாட்டின் முக்கியமான பிரச்னை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வறட்சி காரணமாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழக விவசாயிகள் டெல்லியில் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விவசாயிகள் தற்கொலை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.