இந்தியா

கொரோனா காலம்: வட்டி முழுவதும் தள்ளுபடி இல்லை - உச்ச நீதிமன்றம்

webteam

கொரோனா காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் சிறப்புச் சலுகை கடனாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கடனாளிகள் திரும்ப செலுத்த வேண்டிய தொகைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 2020வரை கொடுக்கப்பட்டிருந்தது. இதில் நிறைய மாறுதல்கள் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் குறிப்பாக அசலை செலுத்துகிறோம் ஆனால் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், வங்கி கடன் தவணைகளை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கி கடன் தவணைகளை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. கொரோனா கால வங்கிக்கடன் தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் உயர்த்த முடியாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் கொரோனா காலத்தில் 2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலித்திருந்தாலும் திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.