மம்தா பானர்ஜி Pt web
இந்தியா

அமலாக்கத் துறை சோதனை | மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ்.. கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

ஐ-பேக் (I-PAC)-ல் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளைத் தடுத்ததாகக் கூறப்படும் புகாரில், சி.பி.ஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை (இ.டி) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Prakash J

ஐ-பேக் (I-PAC)-ல் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளைத் தடுத்ததாகக் கூறப்படும் புகாரில், சி.பி.ஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை (இ.டி) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிலக்கரி கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை நிர்வகிக்கும் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் ஜனவரி 8-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனை நடந்துகொண்டிருந்தபோது, மம்தா பானர்ஜி ஐ-பேக் இயக்குநர் பிரதீக் ஜெயின் வீட்டிற்குச் சென்றார். அப்போது சில கோப்புகளை அவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக கூறி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையிட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், அமலாக்கத் துறையின் பணிக்கு மம்தா பானர்ஜி தடை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு மிகக் கடுமையானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மம்தா பானர்ஜி

தீவிரமான குற்ற வழக்குகளில் மத்திய அரசின் அமைப்புகள் செய்யும் விசாரணையின்போது மாநில காவல்துறை தலையிட முடியுமா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளதாக நீதிபதிகள் கூறினர். மேலும் கொல்கத்தாவில் ஐ-பேக் அலுவலக சோதனையின்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மேற்கு வங்க காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.