இந்தியா

டெல்லி அதிகார போட்டி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Rasus

துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

டெல்லியில் மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ச்சியாக அதிகார மோதல் இருந்து வருகிறது. இதனிடையே, டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது உச்சநீதிமன்றம் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதன்படி, துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஆனால் ஒப்புதல் பெற வேண்டும் என்று அவசியமல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.