விவாகரத்து முறைகளில் ஒரேவிதமான சட்டமுறைகளை உருவாக்கக்கோருவது பற்றி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்களில் மத ரீதியிலான சட்டங்களாக இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் தேவை என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவாகரத்து முறைகளில் ஒரேவிதமான சட்டமுறைகளை உருவாக்கக் கோருவது பற்றி மத்திய சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.