இந்தியா

சாரிடான் மாத்திரைகள் விற்கலாம் - நீதிமன்றம் அனுமதி

சாரிடான் மாத்திரைகள் விற்கலாம் - நீதிமன்றம் அனுமதி

webteam

சாரிடான் உள்ளிட்ட சில மருந்து‌-மாத்திரைகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

328 மருந்துகள், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் தயாரிக்கப்படுவதாக மருத்துவ தொழில்நுட்பக்குழு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், 328 மருந்துகளை விற்பனைச் செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து மருந்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் தடை விதிக்கப்பட்ட 328 மருந்துகளில், டார்ட் வலி நிவாரணி, சாரிடான் மற்றும் பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளையும் தொடர்ந்து விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.