இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது தொடர்பான இந்து சர்க்கார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சஞ்சய் காந்தியின் மகள் எனக் கூறி கொண்ட பெண் ஒருவர், இந்து சர்க்கார் படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அம்மனுவில் தன் தந்தை சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த காட்சிகள், இயக்குநர் மதுர் பந்தர்கர் வெளியிட இருக்கும் ‘இந்து சர்க்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. இது எனது தந்தையின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் செயல். அதனால் படத்தின் காட்சிகளை எடிட் செய்த பின்னர், வெளியிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், சட்டத்திற்கு உட்பட்டே படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறிவிட்டது.