இந்தியா

8 வழிச்‌சாலைத் திட்‌டம் - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

8 வழிச்‌சாலைத் திட்‌டம் - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

webteam

8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.‌ விளைநிலங்களை அழித்து சாலை அமைக்கும்‌ திட்‌டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

அந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த திட்டத்திற்காக நிலங்கள் வாங்கியதில் நிறைய தவறுகள் இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது. திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நிலங்கள் கையகப்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு திட்டம் இறுதி வடிவம் கிடைக்காதபோது எப்படி நிலத்தை எழுதி வாங்குனீர்கள். இதை சாதாரண விஷயமாக எங்களால் கடந்து போக முடியவில்லை. இதை விரிவான விசாரணை செய்ய வேண்டி உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

எனவே எதிர்மனு தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஜூலை முத்ல வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த விசாரணை தொடங்கும்வரை உயர்நீதிமன்றத்தின் தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.