இந்தியா

"கொரோனாவின் 3வது அலையை கட்டுப்படுத்த தயாராகுங்கள்" - உச்ச நீதிமன்றம்

"கொரோனாவின் 3வது அலையை கட்டுப்படுத்த தயாராகுங்கள்" - உச்ச நீதிமன்றம்

Sinekadhara

கொரோனாவின் 3வது அலையை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் இப்போதே தயாராகவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 3வது அலையைத் தடுப்பது கடினம் என்று மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் கூறியிருந்தார். மேலும் 3வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த சூழலில், தற்போது உச்சநீதிமன்றம் கொரோனாவின் 3வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் கொரோனா 2வது அலையில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், 3வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க திட்டம் தேவை எனவும் கூறியிருக்கிறது.