இந்தியா

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தலைமை நீதிபதி அனுமதி

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தலைமை நீதிபதி அனுமதி

Sinekadhara

கொரோனா 2ஆம் அலையை சமாளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கைகள், பரிசோதனை வசதிகள் செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உச்சநீதிமன்ற வெயில்கால விடுமுறை பொதுவாக மே மாதம் தொடங்கி ஜூன் வரை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வரும் 7ஆம் தேதிமுதலே  விடுமுறையில் செல்வதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தலைநகர் டெல்லியில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் தவித்துவரும் நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் கிட்டத்தட்ட 60 படுக்கை வசதிகளை உருவாக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். மேலும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அங்கு மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் கலந்தாலோசித்தப்பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே முக்கியமான வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.