தெருநாய்கள் பிரச்னை web
இந்தியா

தெரு நாய்கள் பிரச்னை| அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.. உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு!

தெரு நாய்கள் பிரச்சினைக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PT WEB

டெல்லியிலுள்ள தெரு நாய்களை காப்பகங்களுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதை எதிர்த்து பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன. அதை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு விசாரித்தது.

அரசு அதிகாரிகளை குற்றஞ்சாட்டிய உச்சநீதிமன்றம்..

விசாரணையின் போது நாய்க்கடியால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் சிலருக்கு கொடூரமான ரேபிஸ் நோய் வருவதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. நாய்க்கடியால் கடந்த ஓராண்டில் நாட்டில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்பிரச்சினையை ஆழமாக விவாதிக்க வேண்டும் என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கவேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் நாய்களை பிடித்து வைக்க போதிய இடம் இல்லை என கபில் சிபல் தெரிவித்த போது, மேம்போக்கான வாதங்களை வைக்காதீர்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தெருநாய்கள் விவகாரம்

தெருநாய்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் இதற்கு அதிகாரிகளே காரணம் என்றும் கூறினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.