இந்தியா

நீதிமன்ற நிகழ்வுகளையும் இனி நேரலையில் காணலாம்

நீதிமன்ற நிகழ்வுகளையும் இனி நேரலையில் காணலாம்

webteam

உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை நடக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணைகளையும் நேரலை செய்ய உச்சநீதிமன்றம் இசைவு தெரிவித்துள்ளது. முதல்படியாக உச்சநீதிமன்றத்தில் இருந்து இதனை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் அனைத்து நீதிமன்ற நிகழ்வுகளையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்றார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும் போது , பாலியல் வன்கொடுமை வழக்குகள், விவாகரத்து வழக்குகள் தவிர்த்து இதர வழக்குகளின் விசாரணைகளை நேரலை செய்யலாம் என்றார். மேலும் இது தொடர்பாக பரிசோதனை முயற்சிகளை உச்சநீதிமன்றத்தில் இருந்து தொடங்கலாம் என்பதால், வழிகாட்டுதல்களை ஒரு அறிக்கையாக சம்ர்பிக்குமாறும் தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 23-ல் நடைபெறும் என்றும், உச்சநீதிமன்ற பார் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துகளை கூறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.