இந்தியா

தாடி எப்ப வைக்கலாம்? இஸ்லாமிய போலீஸுக்கு கோர்ட் அறிவுரை

webteam

மத ரீதியாகத் தேவைப்படும் காலகட்டத்தில் மட்டும் தாடி வைத்துக்கொள்ளலாம் என இஸ்லாமிய காவலர் ஒருவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநில காவல்துறையில் பணியாற்றி வந்தவர் ஜாஹீரோதீன் என்ற இஸ்லாமியர்.‌ இவர், விதிமுறைகள் படி, தாடியை நீக்க வேண்டும் என

மகாராஷ்ட்ரா அரசு கடந்த ‌2012-ஆம் ஆண்டு கூறியது. இதை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.‌ அப்போது, ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டிய

தலைமை நீதிபதி, மத ரீதியாகத் தேவைப்படும் காலகட்டத்தில் மட்டும் தாடி வைத்துகொள்ள அனுமதி அளிக்கிறோம் என கூறினார். இதை ஏற்று மீண்டும்

பணிக்குச் செல்வது ஜாஹீரோதீனின் விருப்பம் என கூறிய தலைமை நீதிபதி, தாடியை நீக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, 5 ஆண்டுகளாக ஜாஹீரோதீன்

பணிக்கு செல்லாமல் இருப்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.