இந்தியா

முல்லைப் பெரியாரில் கேரள அரசின் வாகன நிறுத்துமிடம்: அவசர வழக்காக‌ விசாரணை

webteam

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வாகனநிறுத்துமிடம் அமைப்பதற்கு தடைவிதிக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து, தமிழக அரசு 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், விரைந்து விசாரணை தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழக அரசின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதியளித்தார். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை விசாரணை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.