இந்தியா

சிறையில் முறைகேடு விவகாரம்: இன்னொரு அதிகாரியும் டிரான்ஸ்பர்!

சிறையில் முறைகேடு விவகாரம்: இன்னொரு அதிகாரியும் டிரான்ஸ்பர்!

webteam

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிறையின் தலைமை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமை சூப்பிரண்டாக அனிதா நியமிக்கப்பட்டார். அவரை தலைமை
சூப்பிரண்டாக நியமித்ததை கண்டித்து சிறை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அனிதாவிடம் இருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தலைமை சூப்பிரண்டாக சோமசேகர் நியமிக்கப்பட்டார். ஆனாலும் பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக அனிதா பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், அவரை கர்நாடக அரசு நேற்று டிரான்ஸ்பர் செய்தது. அவர் தார்வார் சிறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ரமேஷ், பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.