இந்தியா

புதிய தேர்தல் ஆணையர் ஆனார் சுனில் அரோரா

புதிய தேர்தல் ஆணையர் ஆனார் சுனில் அரோரா

webteam

புதிய தேர்தல் ஆணையராக, சுனில் அரோரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனராக நசீம் ஜைதி பதவி வகித்த போது ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக இருந்தனர். நசீம் ஜைதி ஜூலை மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஏ.கே.ஜோதி தலைமை தேர்தல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளராக பணியாற்றிய 61 வயது சுனில் அரோரா தேர்தல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இன்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.