இந்தியா

மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கு; சசி தரூர் விடுவிப்பு - டெல்லி சிறப்பு நீதிமன்றம்

JustinDurai
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து அவரது கணவர் சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இரவு டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர், சுனந்தா புஷ்கரின் மரணத்தில் மர்மம் அடங்கியிருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுனந்தாவின் கணவர் சசி தரூருக்கு எதிராகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.