இந்தியா

சுனந்தா மர்ம மரணம் - போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

webteam

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஸ்கரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என போலீசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கு விசாரணை விபரங்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், 2 வாரங்களில் வழக்கை முடிக்கா விட்டால் நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுனந்தா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை விபரத்தை சுப்ரமணிய சாமியிடம் தர முடியாது என டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா 2014ம் ஆண்டு மர்மமான முறையில் ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என ஆரம்பத்தில் நம்பப்பட்ட நிலையில், சுனந்தா கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த விசாரணையை போலீசார் தொடர்ந்து மந்தமாக நடத்தி வருவதால் நீதிபதிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.