இந்தியா

சிறையில் துன்புறுத்துகின்றனர்: சுகேஷ் சந்திரசேகர் முறையீடு

சிறையில் துன்புறுத்துகின்றனர்: சுகேஷ் சந்திரசேகர் முறையீடு

Rasus

சிறையில் தன்னை துன்புறுத்துவதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதிமுக அம்மா அணியினை சேர்ந்த டி.டி.வி.தினகரன் மீதும் டெல்லி போலீசார் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்படுவார் என்ற பேச்சும் பரபரப்பாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் சிறையில் சுகேஷ் சந்திரசேகர் துன்புறுத்தப்படுவதாக அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக டெல்லி குற்றவியல் போலீசார் நாளைக்குள் பதிலளிக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.