பானிபூரி வியாபாரியின் மகன் ஹர்ஷ் குப்தா. இவர், 12ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற தவறி, பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் தனது கடின உழைப்பால் ஐஐடி கனவை நனவாக்கியுள்ளார். அவரது தந்தை பனிபூரி கடை நடத்தி வந்தாலும் மகனின் கல்விக்கு முழு ஆதரவை அளித்து வந்துள்ளார். ஹர்ஷின் இந்த வெற்றி விடாமுயற்சிக்கு கிடைத்த பலன் என அவரது பெற்றோர் நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.