இந்தியா

“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி

Rasus

ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த புண்ணிய பூமி இருப்பதாக இந்துக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அயோத்தியில்  ராமருக்கு கோயில் எழுப்ப வேண்டும் என பல இந்து அமைப்புகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியை கவிழ்ப்பேன் என பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி உத்தரப்பிரதேச மற்றும் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் “நீதி, அரசியல் மற்றும் நம்பிக்கை” குறித்து பேசிய சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது தன்னுடைய இரண்டு எதிர்க்கட்சிகளே உத்தரப்பிரதேச  அரசு மற்றும் மத்திய அரசு என்று கூறினார். அவர்களுக்கு என்னை எதிர்க்க தைரியம் இருக்கிறதா..? ஒருவேளை அவர்கள் என்னை எதிர்த்தால் நான் ஆட்சியை கவிழ்ப்பேன். ஆனால் அவர்கள் அதனை செய்யமாட்டார்கள் என்று எனக்கு தெரியும் என கூறினார்.

தனக்கு தெரிந்த முஸ்லீம் மக்களே அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார். அத்துடன் முகலாய ஆட்சியாளர் பாபரால் கைப்பற்றப்பட்ட நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது என சன்னி வக்ஃபு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே மத்திய அரசிற்கு எதிராக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.