சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தானாக ராஜினாமா செய்ய மாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை லஞ்சம் வாங்குவதை தான் பார்த்ததாக, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தானாக ராஜினாமா செய்ய மாட்டார். தொடக்கத்தில் இருந்தே அவரை நான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறேன். அவரை திரு.420 என்று அழைத்து வந்தேன். அன்னா ஹசாரை உடன் இருந்தது முதல் கெஜ்ரிவாலை எனக்கு தெரியும். அவர் கம்யூனிச ஆதரவாளர் என்பதில் எல்லோரும் எச்சரிக்கையுடன் இருந்தார்கள் என்று கூறினார்.