இந்தியா

செல்போன் ஹேக் குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்க வேண்டும் -சுப்பிரமணிய சுவாமி

செல்போன் ஹேக் குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்க வேண்டும் -சுப்பிரமணிய சுவாமி

JustinDurai
'செல்போன்கள் ஹேக் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி.
THE WIRE உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும் எனத் தகவல் வெளியானது. குறிப்பாக the wire, தி ஹிந்து, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களின் பத்திரிகையாளர்களது செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு, கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தது. இது அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் புகார் சுமத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி கூறவேண்டும் எனவும் தெரிவித்தார். ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கினால் நல்லது; இல்லாவிடில் வாட்டர்கேட் ஊழல்போல் தலைவலிதான்' என கூறினார்.