இந்தியா

2ஜி வழக்கில் தேசத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி

2ஜி வழக்கில் தேசத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி

Rasus

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கி‌ல், தேசத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்‌ என மனுதாரர்‌ சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 ஆம் தேதி காலை‌ 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வ‌ழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர்‌ சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும் தேசத்திற்கு ஆதரவாகவே இந்த தீர்ப்பு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்கில் தீர்ப்பு வரும் போது பார்த்து கொள்ளலாம் என கனிமொழி கூயுள்ளார். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின், தீர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கனிமொழி இவ்வாறு பதில் அளித்தார். இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, பல மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.