இந்தியா

ஜல்லிக்கட்டு நடந்தால் குடியரசு தலைவர் ஆட்சி: சுப்ரமணியன்சாமி

ஜல்லிக்கட்டு நடந்தால் குடியரசு தலைவர் ஆட்சி: சுப்ரமணியன்சாமி

webteam

தடையை மீறி ஜல்லிகட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், ‘உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிகட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பாஜக தலைவர் சுப்ரமணியன்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.