இந்தியா

மத்திய புள்ளியியல் அமைச்சக குழுவினருக்கு புதிய கட்டுப்பாடு   

webteam

புள்ளியியல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிலுள்ள உறுப்பினர்களுக்கு மத்திய புள்ளியியல் அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 

மத்திய புள்ளியியல் அமைச்சகம் இந்தியாவில் புள்ளியியல் தொடர்பான ஆய்வுகளை நடத்தி தரவுகளை வெளியிட்டு வருகிறது. இந்தத் தரவுகளை சேகரிக்க, தரவுகளை ஆய்வு செய்ய அமைச்சகம் பல குழுக்களை அமைத்து வருகிறது. இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு புள்ளியியல் அமைச்சகம் தற்போது ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 

அதன்படி புள்ளியியல் தொடர்பாக குழு உறுப்பினர்களுக்கு ‘Code of Professional Ethics’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் புள்ளியியல் தொடர்பான குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் இந்தக் குழு தொடர்பாக அறியப்படும் தரவுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை அரசு வெளியிடாமல் வெளியே சொல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மேலும் இந்தக் குழுவிலிருந்து விலகிய உறுப்பினர்களும் அரச அந்தத் தரவை வெளியிடும் வரை அது தொடர்பான விவரங்களை வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் தேசிய மாதிரி புள்ளியியல் ஆணையத்தின் வேலையிண்மை தொடர்பான தரவுகளை அரசு வெளியிடுவதற்கு முன்பாகவே அது தொடர்பான தரவுகள் கசிந்து தகவல்கள் வெளியாகின. அத்துடன் அப்போதையை தரவுகளை அரசு வெளியிடாமல் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் மற்று உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்தச் சூழலில் மத்திய அரசு இந்தப் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.