2020ஆம் ஆண்டின் 365 நாட்களில் பெரும்பகுதி கொரோனா பொது முடக்க நாட்களாகவே பலருக்கும் கழிந்து விட்டது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 2020இல் இந்தியாவில் ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பருக்கான ஆர்டர் ஆன்லைனில் அதிகளவில் குவிந்ததாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக அதிகம் ஆர்டர் செய்து டெலிவரி டிரெண்டிங்கில் இடம்பெற்றதை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் டெலிவரி நிறுவனமான DUNZO அப்ளிகேஷன் மூலம் ஆர்டரை செய்தவற்றை அடிப்படையாக கொண்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆணுறையை பொறுத்தவரை இரவு நேரத்தை காட்டிலும் பகல் நேரத்தில் அதிகளவில் ஆர்டர் வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹைதராபாத், சென்னை, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் பெங்களூரு மாதிரியான நகரங்களில் வழக்கத்தை காட்டிலும் ஆணுறையை அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கத்தை விட ஐந்து மடங்கு கூடுதலாக ஆணுறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
புகையிலையை மடிக்க பயன்படும் ரோலிங் பேப்பர் பயன்பாடும் இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.