இந்தியா

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவ‌காரம்: மாணவர்கள், பெற்றோர் முற்றுகைப் போராட்டம்

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவ‌காரம்: மாணவர்கள், பெற்றோர் முற்றுகைப் போராட்டம்

webteam

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மறுதேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சிபிஎஸ்இ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அமைந்துள்ள ப்ரீத் விகார் பகுதியில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மேலும் வினாத்தாள் வெளியானதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளாதார வினாத்தாள் மற்றும் பத்தாம்‌ வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொருளாதாரம் பாடத்திற்கு ஏப்ரல் 25ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் அறிவித்தார். 10ஆம் வகுப்பு கணித்தேர்வு வினாத்தாள் டெல்‌லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியானதால், மறு தேர்வு நடத்துவது குறித்து 15 நாட்களில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் மறுதேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சிபிஎஸ்இ அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.