இந்தியா

வானொலி மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பு

webteam

பள்ளி மாணவர்கள் வானொலி நிகழ்ச்சி மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வசதியை உத்தரபிரதேச அரசு செய்துள்ளது. 

அகில இந்திய வானொலியில் ஆவோ அங்கிரேசி சீகே என்ற பெயரில் வாருங்கள் ஆங்கிலம் கற்கலாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. உத்தரப்பிரதேச மாநில கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியால் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலன் பெற்று வந்தனர். மாணவர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சியை ஒலிபரப்ப உத்தரப்பிரதேச கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு ஆல் இந்தியா ரேடியோவில் இரண்டு நாட்கள் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.