இந்தியா

பல்கலை.யில் பிரியாணி: மாணவருக்கு அபராதம்

பல்கலை.யில் பிரியாணி: மாணவருக்கு அபராதம்

webteam

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குள் பிரியாணி சமைத்து சாப்பிட்டதாக மாணவர் ஒருவருக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் மாடிப் படியில் அமர்ந்து மாணவர் ஒருவர் அத்துமீறி பிரியாணி சமைத்துள்ளார். அதை சக மாணவர்களுக்கு, அந்த மாணவர் பரிமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் இத்தகைய செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்காலத்தில் இங்கு பயிலும் மாணவர்கள் இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.