இந்தியா

சிறுமிக்கு நீதி கேட்டு சிம்லா நெடுஞ்சாலையில் போராட்டம்

சிறுமிக்கு நீதி கேட்டு சிம்லா நெடுஞ்சாலையில் போராட்டம்

webteam

ஹிமாச்சலப் பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு சிம்லா நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்றது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தலைநகர் சிம்லாவில் தேசிய நெடுஞ்சாலையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக அந்த சாலையில் நீண்டநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹிமாச்சல பிரதேசத்தில் கோட்கஹி என்ற இடத்தில் கடந்த 20 ஆம் தேதி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக தலைமைச் செயலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.